கை,வாய், பாதங்களில் ஏற்படும் புண்ணிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 4

17 Sep, 2019 | 05:49 PM
image

எம்முடைய வீடுகளில் இருக்கும் சிறார்களுக்கு வாயிலும், கைகளிலும், பாதங்களிலும் புண்கள் ஏற்படுவதை கண்டிருக்கிறோம். பருவகாலங்களில் ஏற்படும் இத்தகைய பாதிப்பிற்கு உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனை பெற்று, உரிய சிகிச்சை பெற்று குணப்படுத்திக் கொள்ளவேண்டும். 

இத்தகைய புண்கள் ஏற்பட என்ன காரணம் என்பதை மருத்துவ ரீதியாக தெரிந்து கொள்ளுங்கள். இத்தகைய புண்கள் காக்ஸாகீ வைரஸ் A 6, என்டோ வைரஸ் 71 ஆகிய வைரஸ் கிருமிகளால் ஏற்படக்கூடியது. இது ஒருவகையான தொற்றுநோய். பெரியவர்களுக்கும். குழந்தைகளுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய புண்கள் வைரஸ்களால் ஏற்படும்.

இது ஒருவகையான தொற்றுநோய் என்பதால், இதன் அறிகுறியாக முதலில் காய்ச்சல் ஏற்படும். அந்தக் காய்ச்சல் அதிகபட்சம் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும். இதன்போது வாயில் கொப்புளங்களும், நாக்குப் பகுதிகளில் கொப்புளங்களும், கை மற்றும் பாத பகுதிகளில் சிவப்பு வண்ணத்தில் கொப்புளங்களும் ஏற்படும். சிலருக்கு வாயில் ஏற்படும் புண்ணால் எச்சில் விழுங்குவதிலும்,  தண்ணீரை பருகுவதிலும் சிரமம் ஏற்படும். சிலருக்கு நகக்கண்ணில் வலி ஏற்படக்கூடும். 

இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ், தொற்று நோய் என்பதால், நோய் பாதித்த பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் இல்லத்திலேயே வைத்திருந்து சிகிச்சை கொடுத்தால்.. ஒரு வாரத்திற்குள் குணமாகிவிடும். ஆனால் இதனை சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தினால், மூளைக்காய்ச்சல் ஏற்படக்கூடும், சிலருக்கு நுரையீரலும், இதயமும் பாதிக்கப்படும்.

இதன்போது நோயாளிக்கு நீர் வறட்சி ஏற்படக்கூடும். அதனை முற்றாக தவிர்க்க வேண்டும். அதேபோல் சிலருக்கு கைவிரல்களும் மரத்துப்போகக்கூடும். அதனால் அதற்குரிய சிகிச்சைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பெற்று அதில் இருந்து முழுமையாக நிவாரணம் பெற வேண்டும்.

உங்களது கைகளையும், பாதங்களையும் நன்றாக கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டறிய படவில்லை என்பதால், இத்தகைய அறிகுறிகள் தென்பட்டவுடன் சிகிச்சை மேற்கொண்டு சிறார்களை பாதுகாக்க வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29