(செ.தேன்மொழி)

மதவாச்சி பகுதியில் காட்டுயானையால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தரணகொல்லேவ குளத்தின் வரம்பில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நபரொருவர் காட்டுயானையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கில் ஒன்றில் சென்றுக் கொண்டிருந்த நபரொருவரே இவ்வாறு காட்டுயானையால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த நபர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சாமர சந்தருவன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்