மட்டக்களப்பு  வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நெடியமடு  கிராமங்களில்   காட்டுயானைகள்  ஊடுருவி விவசாயியின்  பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  நெடியமடு கிராமங்களில் செவ்வாய்கிழமை (17) அதிகாலை காட்டுயானைகள் உட்புகுந்து அங்கிருந்த விவசாயி ஒருவரின் பயிர்களையும் தென்னைமரங்கள் சிலவற்றையும் அழித்துவிட்டு சென்றுள்ளன.

செவ்வாய்கிழமை  அதிகாலை 2 மணியளவில்  கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயிகளின் தோட்டத்தினுள்  சில காட்டுயானைகள்   ஊடுருவி அங்குள்ள  பயிர்வகைகளையும் தொன்னை மரங்கள் சிலவற்றையும் அழித்து துவசம் செய்துள்ளது.  

இப் பிரதேசத்தில் தற்போது யானை தடுப்பு மின்சார வேலி சீர் செய்யப்பட்டு பாதுகாப்பாக இயங்கிவரும் நிலையில் மின்சார வேலியினை உடைத்துவிட்டு கிராமத்திற்குள் ஊடுருவியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.