இந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேது ராஜன். இவருக்கு வயது 42. இவர், தண்ணீர் போத்தல்களை விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரிற்கு 2 குழந்தைகளுமு் உள்ளனர். இவர், வழக்கமாக இரவு நேரங்களில் அங்குள்ள தெருநாய்களுக்கு சாப்பாடு வைப்பது வழக்கம். நேற்றிரவும் அவ்வாறு, சாப்பிட்டுவிட்டு, மீதமான சாப்பாட்டை எடுத்து கொண்டு வீட்டிற்கு வெளியே வந்துள்ளர்.

அங்கிருந்த மின்கம்பமொன்று, சில காலமாகவே சேதமாகி இருந்துள்ளது. சேது சாப்பாட்டை வைத்த உடனேயே அந்த மின்கம்பம் திடீரென உடைந்து சரிந்தது.

இதில், மின் கம்பி சேது மீது அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தும், சேது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சிட்லப்பாக்கம் பொலிசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். ஆனால் இந்த சம்பவத்தால் குறித்த பகுதி மக்கள் பெரும் சோகத்தோடும், கோபத்தோடும் உள்ளதாக தெரியவந்துள்ளது .

இம்மின்கம்பத்தை அகற்ற கோரி பலமுறை புகார் சொல்லியும், மின்சாரசபை எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லையென்பதும் குறிப்பிடதக்கது.