(நா.தினுஷா, ஆர். விதுஷா)

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது. யாராக இருந்தாலும் வேட்பாளராக களமிறங்குவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அத்துடன் குடும்பமொன்றின் தேவைக்கேற்ற தீர்மானங்களை ஐக்கிய தேசிய கட்சி எடுக்காது.  ஜனநாயக ரீதியாகவே வேட்பாளரை தெரிவு செய்யும். அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதனை அறிவித்துள்ளார். 

சஜித்தைப் போன்று வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்குமாக இருந்தால் அவர்களாலும் தமது விருப்பத்தை அறிவிக்க முடியும். ஆகவே இது முரண்பாடு கிடையாது.  கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைளே தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.

சஜித் பிரேமதாச தலைமையில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.