ஹபரண, அம்பகஸ்வெவ குளத்தில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று மாலை அவர்கள் இருவரும் நண்பர்களுடன் அம்பகஸ்வெவ குளத்தில் மீன்பிடிப்பதற்காக சென்ற போது, காட்டு யானை ஒன்று அவர்களை துரத்தியதால் அவர்கள் அந்தக் குளத்தில் குதித்து தப்ப முயன்றவேளையில்  இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். 

ஹபரணை பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் இருவரினதும் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.