பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி உண்பதற்கு அணியின் பயிற்றுவிப்பாளரும் தெரிவுக்குழுவின் தலைவருமான மிஸ்பா உல் ஹக் தடை விதித்துள்ளார்.

புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மிஸ்பாஉல் ஹக் வீரர்களிற்கான உணவு திட்டமொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதனை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அணி வீரர்களின் உடற்தகுதி வீழ்ச்சியடைவதை கருத்திலெடுத்துள்ள மிஸ்பா உல் ஹக் பாக்கிஸ்தான் அணி வீரர்கள் மேலும் உற்சாகத்துடன் களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு வழிவகுக்ககூடிய உணவுநடைமுறையை அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில்  மிஸ்பா உல் ஹக் இனிப்பு மற்றும் எண்ணெய் உணவுகளிற்கு தடை விதித்துள்ளார்.

பாக்கிஸ்தான் அணியின் தேசிய பயிற்சி முகாமில் இணைக்கப்பட்டுள்ள வீரர்களிற்கும் உள்ளுர் போட்டிகளில் விளையாடும் வீரர்களிற்கும் புதிய உடற்தகுதி கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களது  உணவுப்பழக்கங்களை மாற்றுமாறு மிஸ்பா உல் ஹக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீரர்கள் பிரியாணியையோ அல்லது  எண்ணெய் கலந்த மாமிசங்களையோ இனிப்புகளையே உண்ணக்கூடாது என பணித்துள்ளார்.

உலககிண்ணப்போட்டிகளின் போது  பாக்கிஸ்தான் வீரர்களின் உணவுபழக்கங்கள் குறித்து சர்ச்சை உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.