மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டறியத் தவறினால் ஜே.வி.பியும் பழைய இடதுசாரிக்கட்சிகள் போன்று பெயர்ப்பலகையுடன் மாத்திரம் இருக்க வேண்டிவரும் என்கிறார் அதன் முன்னாள் பொதுச்செயலாளர் கலாநிதி லயனல் போபகே ஜனதா விமுக்தி பெரமுன இலங்கை மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறியத் தவறினால் அதுவும் பழைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று பெயர்ப்பலகை அளவிலான மற்றுமொரு இடதுசாரிக் கட்சியாகவே மாறவேண்டிவரும் என்று ஜே.வி.பியின் முன்னாள் பொதுச்செயலாளரான கலாநிதி லயனல் போபகே கூறியிருக்கிறார்.

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் லயனல் போபகேரூபவ் ரூசூ39;கிளர்ச்சிரூபவ் அடக்குமுறை மற்றும் இலங்கையில் நீதிக்கான போராட்டம் - லயனல் போபகேயின் கதைரூஙரழவ் என்ற தனது ஆங்கில சரித நூலின் மொழிபெயர்க்கை வெளியிடுவதற்காக அண்மையில் கொழும்பு வந்திருந்தார். இந்த நூல் ஓய்வுபெற்ற அரசாங்க சேவையாளரும்ரூபவ் தொழிற்சங்க செயற்பாட்டாளருமான மைக்கேல் கொலின் குக் என்பவரால் எழுதப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் சமூக நீதிக்கான பிரசாரங்களில்ரூபவ் குறிப்பாக எழுத்துத்துறை மூலமாக தற்போது பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கும் 74 வயதான போபகே கொழும்பு ஆங்கில தினசரி ஒன்றிற்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

மாத்தறை ராகுல கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்திலேயே அரசியலில் தனது ஈடுபாடு ஆரம்பித்ததாகவும், 1956 ஆம் ஆண்டு போதனா மொழியாக சிங்களம் மாற்றமடைந்ததன் அனுபவத்தைக் கொண்ட தலைமுறையைச் சேர்ந்தவரென்றும் தன்னைக் கூறிக்கொண்ட போபகேரூபவ் அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பேரவையின் ஒரு முன்னணி உறுப்பினராகவும் செயற்பட்டவராவார். ரோஹன விஜேவீர ஜனதா விமுக்தி பெரமுனவை ஆரம்பித்த போது பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவர் சங்கத்தில் இவர் இணைந்துகொண்டார்.

அரசியலில் ஈடுபட்ட வண்ணமே தனது கல்வியையும் தொடர்ந்த அவர், சிறையில் இருந்த வண்ணமே தனது பல்கலைக்கழக இறுதிப் பரீட்சைக்குத் தோற்றினார். அந்த நேர்காணலில் கலாநிதி போபகே கூறியிருப்பதாவது: ஜே.வி.பியின் எதிர்காலம் அதன் தற்போதைய நடத்தையினாலேயே தீர்மானிக்கப்படும்.

கட்சிக்குள் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. ஜே.வி.பி பிரச்சினைகளுக்கு தீர்வு யோசனைகளைக் கூறுகின்றது. மக்களினால் பல பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு ஜே.வி.பியினால் தீர்வினைக்காண முடியுமா என்பதைப் பொறுத்திருந்து அவதானிக்க வேண்டும். சமுதாயத்தின் அடிமட்டத்தை நோக்குவோமாக இருந்தால் பெருவாரியான பொருளாதாரப் பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். நாட்டின் பல பகுதிகளில் மக்கள் பாராதூரமான சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக்கூடிய செயற்திட்டங்களை முன்வைக்க வேண்டும். ஜே.வி.பி மக்களின் ஒரு கட்சியாக மாறாவிட்டால் அதுவும் இன்னுமொரு பெயர்ப்பலகை இடதுசாரிக் கட்சியாகவே முடிந்துவிடும். அநுரகுமாரவை ஆதரிக்கும் நோக்கமில்லை தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவு வழங்குவதற்காகவும் இலங்கைக்கு வந்தீர்களா? என்று கலாநிதி போபகேயிடம் கேட்டபோதுரூபவ் ரூசூ39;இல்லைரூபவ் ஜே.வி.பியையோ அல்லது அதன் ஜனாதிபதி Nவுட்பாளரையோ ஆதரிக்கும் நோக்கம் எனக்கில்லை. ஜே.வி.பி ஏதாவது நல்ல காரியத்தை – நேர்மறையான காரியங்களைச் செய்தால் எங்களது ஆசீர்வாதம் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் ஏதாவது தவறைச் செய்தால் அவர்களைக் கண்டிக்கத் தயங்க மாட்டேன். நான் இப்போது ஒரு சுயாதீன செயற்பாட்டாளன். தீவிர அரசியலுக்குத் திரும்பும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் கட்டுரைகளை எழுதுகின்றேன். கட்சி செய்பவற்றை ஆராய்கிறேன். அவர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்ரூஙரழவ் என்று பதிலளித்தார்.

மஹிந்தவை ஆதரித்தது தவறு

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு உதவியதன் மூலம் ஜே.வி.பி தவறிழைத்திருக்கிறது. 2005 இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கு ஜே.வி.பி பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கக்கூடாது என்பதே எனது அபிப்பிராயம்.

அவரை ஆதரித்து பிரசாரம் செய்ததால் ஜே.வி.பிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ராஜபக்ஷவினதும்ரூபவ் அவரது குடும்பத்தினதும் வரலாற்றைக் கருத்திலெடுத்துச் செயற்பட்டிருக்க வேண்டும். தேசியவாத இனவாதத்தை ஊக்குவிப்பதை நோக்கி ஜே.வி.பி பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறது.

இனவாதத்தை ஊக்குவித்த ஜே.வி.பி

அன்று இனவாதத்தை ஊக்குவிப்பதற்கு மேற்கொண்ட தவறான தீர்மானத்திற்கான குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியினால் இன்னமும் கூட மீண்டுவர முடியவில்லை. ஜே.வி.பி அதன் தவறை விளங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஜே.வி.பி தலைவர்கள் ஏற்றுக்கொண்டதும் கூட பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தியது. அவர்கள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. ஏனென்றால் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட பிறகு ஜே.வி.பி தலைவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்திருக்க முடியாது. அரசாங்கத்தில் தங்களுக்கு மேலேயிருக்கும் ஏனையவர்களின் சுமைகளையும் இவர்களே பொறுப்பேற்க வேண்டியிருந்திருக்கும். அதுவே என்.எம்.பெரேராவிற்கும்ரூபவ் பிலிப் குணவர்தனவிற்கும்ரூபவ் ஏனைய இடதுசாரித் தலைவர்களுக்கும் நேர்ந்தது.

தவறுகளிலிருந்து படிப்பினை

ஜே.வி.பி அதன் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு கட்சி என்ற முறையில் ஜே.வி.பி தவறுகளைச் செய்திருக்கிறது. ஆனால் அதன் பல தவறுகளைத் திருத்தவும் அதனால் முடிந்திருக்கிறது. கூட்டரசாங்கங்களின் பங்காளியாக ஒருபோதும் ஜே.வி.பி வரக்கூடாது.

அரசியல் நிலைவரம்

நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் நிலைவரம் பற்றியும்ரூபவ் நாடு முன்நோக்கிச் செல்வதற்கான வழி பற்றிய அவரது சிந்தனை குறித்தும் அபிப்பிராயத்தைக் கேட்டபோது கலாநிதி போபகே பின்வருமாறு கூறினார்:

ஒரு நாடு என்ற வகையில் இலங்கை இரு பிரதான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றது. ஒன்று பொருளாதாரப் பிரச்சினை. மற்றையது தேசிய பிரச்சினை. அரசியல் வர்க்க நலன்களே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலிருந்து எம்மைத் தடுக்கிறது. மக்கள் ஆட்சிமுறையில் கூடுதலாகப் பங்கேற்க வேண்டும். அத்துடன் மக்கள் சமூகத்தின் சகல பிரிவினருக்கும் பயன்தரத்தக்க தேசிய கொள்கைகளை வகுப்பதற்கு அரசாங்கங்களுக்குக் கூடுதல் நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்.

தேசிய பிரச்சினை

தேசிய பிரச்சினையைப் பொறுத்தவரை மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சிங்களவர்களும்ரூபவ் தமிழர்களும்ரூபவ் முஸ்லிம்களும்ரூபவ் ஏனைய சமூகத்தவர்களும் தாங்கள் மாத்திரமே இந்த நாட்டில் வாழும் தனியான சமூகமல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மதிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அத்தகைய பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக மாத்திரமே முன்நோக்கிச் சென்று எம்மால் தேசிய மேம்பாட்டை அடைய முடியும். அந்த செயற்பாடுகளைப் பொறுத்தவரை மக்கள் தங்களின் மனித உரிமைகளையும்ரூபவ் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

அரசியலில் ரூடவ்டுபடுகின்றவர்கள் மத்தியில் நலன்கள் முரண்படுவதைத் தடுக்க புதுப்பொறிமுறைகளை மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அல்லது தற்போதிருக்கும் பொறிமுறைகளை உரிய விதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு கடை உரிமையாளர் பாராளுமன்ற உறுப்பினராக வந்துரூபவ் பிறகு வாணிப அமைச்சராக உயர்கின்றார் என்றால் நிலைவரத்தை நினைத்துப் பாருங்கள். அத்தகைய பல உதாரணங்களை இலங்கை அரசியலில் நாம் காண்கின்றோம். எனவே மக்கள் தங்களது நலன்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகளைக் கண்டறிய வேண்டும். அதுவே தற்போது நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு இருக்கக்கூடிய சிறந்த சாத்தியமான மார்க்கமாகும்.