வளர்ப்பு நாய் பாதசாரி ஒருவரைக் கடித்துக் குதறியதையடுத்து குறித்த நாயின் உரிமையாளரான கல்லூரியொன்றின் பிரதி அதிபரை ஒக்கம்பிட்டிய பொலிசார் இன்று கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து நாயால் கடியுண்டவர் ஒக்கம்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

குறித்த பாதசாரி ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவில் வழங்கிய புகாரையடுத்து நாயின் உரிமையாளரான ஒக்கம்பிட்டிய மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது கைது செய்யப்பட்ட கல்லூரி பிரதி அதிபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஒக்கம்பிட்டிய பொலிசார் தெரிவித்தனர்.