மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டைப் போக்க இரத்ததான முகாம்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் யு.எச்.வாரியபொல மற்றும் தாதியர்கள் வைத்திசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
தலசீமியா நோயாளர்களின் அதிகரிப்பும் சமதான சூழலையடுத்து, அதிகமான நோயாளர்கள் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதுமே இரத்த தட்டுப்பாட்டிற்கான காரணமென வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM