களுகங்ககையின் நீர் மட்டம் உயர்வடைந்துவருவதால் மில்கந்த பகுதியில் வெள்ளம் ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

அத்தோடு குறித்த பகுதியில் ஆற்றை அண்மித்து தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் குறித்த ஆற்றை கடக்கும் பொதுமக்களும் மிக அவதானமாக செயல்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தோடு வெள்ளம் ஏற்படும் அபாய நிலையின் போது குறித்த பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.