(ஆர்.யசி)

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் "20"ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைக் கோர­வுள்ளார்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று காலையில் அமைச்­ச­ரவை கூடு­கின்­றது. இந்­நி­லையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லாது செய்யும் 20ஆம்  திருத்த சட்ட யோசனை  அமைச்­ச­ரவை  அங்­கீ­கா­ரத்­துக்­காக சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரிய வரு­கின்­றது. 

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் பிர­தான கார­ணியை உள்­ள­டக்கி ஏனைய சில விட­யங்­க­ளுடன் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத்தின் மூல­மாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வர்த்­த­மா­னியில் வெ ளியி­டப்­பட்டு  பாரா­ளு­மன்ற ஒழுங்­குப்­பத்­தி­ரத்­துக்கு கொண்­டு­

வ­ரப்­பட்­டது.  எனினும் கடந்த காலங்­களில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தான கட்­சி­க­ளுக்கு இடையில் ஏற்­பட்ட கருத்து முரண்­பா­டுகள், தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்ட பிள­வுகள் மற்றும் பிர­தமர் -ஜனா­தி­ப­திக்கு இடையில் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக 20ஆம் திருத்தம் கவ­னத்தில் கொள்­ளாது கைவிட்­ட­ப­டியே இருந்­தது. 

பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்­பெற்ற  குண்டுத் தாக்­கு­தலை அடுத்து   கட்­சிகள்  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இப்­போது நீக்க வேண்டாம் என்ற நிலைப்­பாட்­டுக்கு வந்­தி­ருந்­தன.  இந்­நி­லை­யி­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் 20ஆம் திருத்தம் குறித்து மீண்டும் கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

 இன்று அமைச்­ச­ரவை காலை 10  மணிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் கூட­வுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 20ஆம் திருத்தத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதில் பிரதானமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் காரணிகளே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.