ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார்.

அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவிர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஜனநாயக ரீதியான கலந்துரையாடல்களின் மூலம் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார். 

வேட்பாளர் குறித்து உடனடித் தீர்மானம் எடுக்க வேண்டிய  காலக்கட்டம் நெருங்கி விட்டதால் பாராளமன்றக் குழுவையும் கட்சியின் செயற்குழுவையும் அழைத்து வெளிப்படையாக பேச்சுவாரத்தை நடத்த வேண்டும். 

இந்த இரு குழுவினருக்கும் இடையில் வேட்பாளர் குறித்து கருத்து வேறுபாடுகள் இருக்குமானால், இரகசிய வாக்கெடுப்பினூடாக பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம்  கொண்ட  ஜனாதிபதி முறையை  நீக்குவத குறித்து மக்களின்  முடிவு எதுவோ அதுவே  எனது நிலைப்பாடாக அமையும் என்றும்  கட்சிக்குள் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலேயே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்வந்துள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.