கொழும்பு தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் மிகவும் உயரமானக் கோபுரமாகக் கருதப்படும் கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திங்கட்கிழமை(16)  மாலை 5 மணியளில்  திறக்கப்பட்டு  மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தாமரை கோபுரம் நாளையிலிருந்து ஒரு வார காலத்திற்கு பின்னர் மக்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.