(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடனான பரந்துப்பட்ட கூட்டணி சாத்தியப்படாத நிலையில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தனித்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொள்வார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் கூட்டணி அமைத்து தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் பொதுஜன பெரமுன செயற்படவில்லை என்றும் வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவினையும் இம்முறை எம்மால் பெற முடியும். 

போலியான வாக்குறுதிகளை ஒருபோதும் தமிழ் மக்கள் மத்தியில் முன்வைக்கவும் மாட்டோம். அரசியல் ரீதியில் இம்முறை  பாரம்பரியமான போலியான மரபுகளை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.