சர்வதேச தொடர்களை புறக்கணிக்கும் இலங்கை வீரர்களை தண்டிக்கவேண்டும்- ஜாவிட் மியன்டாட் கடும் கருத்து.

Published By: Rajeeban

16 Sep, 2019 | 08:21 PM
image

பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள இலங்கை வீரர்களிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஜாவிட் மியன்டாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் தொடர்களை விட உலகநாடுகளில் இடம்பெறும் லீக் போட்டிகளிற்கு முன்னுரிமை வழங்கும் வீரர்களை இலங்கை தண்டிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளே வீரர்களின் மிகவும் முன்னுரிமைக்குரிய விடயமாக அமையவேண்டும் என தெரிவித்துள்ள மியன்டாட் பாக்கிஸ்தான் தொடரிலிருந்து விலகிய வீரர்களை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தண்டிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் விஜயம் மேற்கொள்ளவில்லை என்பது குறித்து பாக்கிஸ்தான் வீரர்கள் சிந்திக்கவேண்டிய அவசியமில்;லை அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான தொடர் பாக்கிஸ்தான் தனது எதிர்கால சர்வதேச போட்டிகளை சிறந்த முறையில்  ஆரம்பிப்பதற்கு உதவும் எனவும் மியன்டாட் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானின் துடுப்பாட்டவீரர்கள் சதம் பெறும் ஒவ்வொரு முறையும் அதனை இரட்டை சதமாக மாற்ற முயலவேண்டும்,இது அவர்களின் மனோநிலையை வலுப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59