ஸ்மாரட் போன்களில்  செயல்பட செயலிகள் மிக முக்கியமானவை. ஆனால் எல்லா செயலிகளையும் இலவசமாக பெற இயலாது. நாம் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யும் செயலிகள் சில வேளை எமக்கு அவசியமற்றதாகலாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செலுத்திய பணத்தை மிளப்பெறுவது என நாம் வருந்தலாம்.   ஆனால் வருந்த தேவையில்லை. இவ்வாறன சந்தர்ப்பங்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி செயலி, புத்தகம், திரைப்படம் அல்லது கேம்களுக்கு நீங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில் ...

1 - கூகுள் பிளே ஸ்டோருக்கு செல்லவும்.

2 - செயலியின் இடதுபுறமாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

3 - அக்கவுண்ட்ஸ் (Account)ஆப்ஷனில் பர்சேஸ் ஹிஸ்ட்ரியை (Purchase histroty )தேர்வு செய்ய வேண்டும் 

4 - பர்சேஸ் ஹிஸ்ட்ரி பகுதியில் கீழ்புறமாக ஸ்கிரால் செய்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான செயலியை தேர்வு செய்ய வேண்டும் 

5 - செயலியை தேர்வு செய்ததும் ரீஃபண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்யவும் 

6 - திரையில் கேட்கப்படும் போது Yes ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

7 - இவ்வாறு செய்ததும், செயலி அல்லது கேம் ஸ்மார்ட்போனில் இருந்து தானாக நீக்கப்பட்டு விடும். நீங்கள் செயலியை வாங்குவதற்கு செலுத்திய தொகை உங்களது கணக்கிற்கு அனுப்பப்படும்.