சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ மாகாணத்தில் அர் ராய் கிராமத்தில் வைத்தியசாலைக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

அல் ராய் கிமாரம் சிரிய - துருக்கி எல்லையோர பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கிராமம் துருக்கி ஆதரவு தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.