கடந்த 24 மணித்தியாலத்தில் அதிக்கூடிய மழை வீழ்ச்சியாக  நுவரெலியாவில் 192 மில்லி மீற்றர்  பதிவாகியுள்ளது வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கிலிருந்து தென்மேற்கு பகுதியை நோக்கி  காற்று வீசியதோடு அநுராதபுரம், அம்பாந்தோட்டை, குருணாகலை, மகா-இலுப்பல்லம, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக சுமார் 20 பாகை செல்சியாக பதிவாகியுள்ளதாக வளிமண்டல  திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக கூடிய வெப்பநிலையாக பொலனறுவையில் 34.9 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய வடக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், கடும் மழை காரணமாக நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளில் நிலச்சரிவு எச்சரிக்கைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எஹெலியகோடாவில் வசிப்பவர்கள், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவா மற்றும் களுத்துறை மாவட்டத்தில் புலத்சின்ஹலவில் வசிப்பவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.