நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தெற்கு, மேற்கு மற்றும் தென்மேற்கு ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் சில இடங்களில்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

எனவே, நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக சிறிய மீன்பிடிப் படகுகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் இன்றைய தினம் தமது கடல் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு மீன்பிடித் திணைக்களம் அறித்துள்ளது.

அத்தோடு, கொழும்பு, புத்தளம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் கடல் பிரதேசங்கள் சற்றுக் கொந்தளிப்பாக காணப்படும் எனவும்,  காற்றின் வேகமும் அங்கு அதிகரித்து வீசுவதால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.