(செ.தேன்மொழி)

அரலகங்வில - வராப்பிட்டி பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராப்பிட்டி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காட்டுயாலையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வராபிட்டி - றுஹூணுகம பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய காமினி குமாரரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.