(ஆர்.விதுஷா)

சீதுவை – கட்டுநாயக்க பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம்  என்னும்  போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டத்தில்  இளம்பெண்ணெருவர் கைது  செய்யப்பட்டுள்ளார். 

இச்சுற்றிவளைப்பு  நடவடிக்கை நேற்றிரவு 8.30  மணியளவில் இடம் பெற்றதாக சீதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.  

பேலியகொட மேல்மாகாண வடக்கு  கற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நீர்கொழும்பு  நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போதே, குறித்த பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபர் கலேவெல பகுதியை சேர்ந்த 21 வயதுடையவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

அவர், விபச்சார விடுதியின் முகாமையாளராக  கடமையாற்றியாற்றியுள்ளதுடன், சுற்றிவளைப்பு இடம்பெற்ற  தருணத்தில்  விபச்சாரத்தில் ஈடுபட்டமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரிலுமே கைது  செய்யப்பட்டுள்ளார். சீதுவ  பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.