எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் கடையடைப்புடன்  ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டதனால்    அம்பாறையில் சில இடங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நீதி கோரி தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி யாழில் இன்று திங்கட்கிழமை(16) ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு கிழக்கிலிருந்து ஆதரவாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தின் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை பாண்டிருப்பு காரைதீவு திருக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

மேலும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள  நிலையில் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன்  பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.