சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித தேவரப் பெரும உள்ளிட்ட ஆறு பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

நீதிமன்ற கட்டளையை மீறி சடலம் ஒன்றை புதைத்தமை தொடர்பில் பாலித தேவரப்பெரும உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்களை  இன்று மத்துமக நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரியுமே நேற்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.