நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது என பிரதமர் ரணி விக்ரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும்  அவரது டுவிட்டர் பக்கத்தில் மும்மொழிகளிலும் தெவரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மோசடி மற்றும் ஊழலை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை நான் சாட்சியமளித்தேன்.  பிரதமர் என்ற வகையில் நான் முன்னிலையான இரண்டாவது சுயாதீன ஆணைக்குழுவாக இது உள்ளது.  நாம் தொடர்ந்தும் பொறுப்புக் கூறலை உறுதி செய்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊழல் மேசாசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜராகி இரண்டு மணி நேர சாட்சியம்  வழங்கியமை குறிப்பிடத்தக்கது.