(செ.தேன்மொழி)

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

கடந்த 5 ஆம் திகதி  கந்தானை பகுதியில்  மாணிக்கக்கல் கொள்வனவு செய்யும் நோக்குடன் வந்த நபரொருவரிடம் இருந்த 14 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டமை தொடர்பில் பேலியாகொட மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். 

இந்நிலையில் குறித்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.