நேற்று மாலை முதல் பெய்த கடும் மழையால் தியகல நோட்டன் வீதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில். அவ்வீதியுடளாள போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வீதியுடாக செல்லும் வாகனங்களை மாற்று வழியில் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறித்தியுள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு வேளையில் கன மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால்  பாரிய மரமென்று சரிந்ததாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது  வீதி அபிவிருத்தி அதிகார சபையும் நோட்டன் பொலிஸாரும் இணைந்து சரிந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று மதியம் முதல் அவ்வீதியுடாக பயணிக்கலாம் என வீதி அதிகார சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.