நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக  அத்தனகல ஓயா, களு கங்கை, களனி மற்றும் மகாவலி ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நீர் நிலைகளை அண்டிய அதாவது, துன்மல, இரத்தினபுரி, மில்கந்த, நோர்வூட் மற்றும் நாவலப்பிட்டி போன்ற பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.