கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த 38 பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளன.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் திருத்தப் பணிகளுக்காக முதற்கட்டமாக 12 பாடசாலைகள் முழுமையாக மூடப்பட்டதுடன் மேலும் 26 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டிருந்தன.

இதற்கிடையில், கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தப் பணிகள் நேற்று ஆரம்பமாகியது.

இன்று முதல் கொழும்பு ஆனந்தா கல்லூரி, கண்டி வித்யார்த்த கல்லூரி, மாத்தறை மஹாநாம மாகா வித்தியாலயம் மற்றும் குருநாகல் லக்தாஸ் டிமெல் மகா வித்தியாலயம் ஆகியே பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பாடசாலைகளானது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.