தொடர்ந்தும் சொதப்பிய வோர்னர், தவற விட்ட ஸ்மித் ; தொடரை சமப்படுத்திய இங்கிலாந்து

Published By: Vishnu

16 Sep, 2019 | 11:07 AM
image

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 135 ஓட்டத்தினால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இத் தொடரில் இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலிய அணியும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றிருக்க ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி சமநிலையில் முடிந்தது.

அதன்படி தொடரில் அவுஸ்திரேலிய அணி 2:1 என்ற கணக்கில் முன்னிலையிருக்க தொடரின் இறுதிப் போட்டியானது கடந்த 12 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வுசெய்ய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி முதல் இன்னிங்ஸிக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. 

அந்த இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 70 ஓட்டத்தையும், ஜோ  ரூட் 57 ஓட்டத்தையும், ரோரி பேர்ன்ஸ் 47 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற, பந்து வீச்சில் அவுஸ்திரேலிய  அணிசார்பில் மிட்செல் மார்ஸ் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஹேசல்வுட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 68.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 225 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 80 ஓட்டத்தையும், லபுஸ்சாக்னே 48 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற, பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்பர ஆர்ச்சர் 6 விக்கெட்டுக்களையும், சாம் கரன் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் 69 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவின்போது 8 விக்கெட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றதுடன், மொத்தமாக 382 ஓட்டங்களினால் முன்னிலையில் இருந்தது. 

இந் நிலையில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்த‍ை 313 ஓட்டத்துடன் ஆரம்பித்த இங்கிலாந்து அணி எஞ்சிய இரு விக்கெட்டையும் இழந்து 329 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ டென்லி 94 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்தையும், ஜோஸ் பட்லர் 47 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற, பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நெதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ், பீட்டர் சிடில்மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு 399 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த மைதானத்தில் 300 ஓட்டங்களுக்கு மேலான ஓட்ட எண்ணிக்கையை யாரும் விரட்டிப்பிடித்ததில்லை. இமாலய இலக்கை நோக்கி 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியாவுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

மார்கஸ் ஹாரிஸ் 9 ஓட்டத்துடன் ஸ்டூவர்ட் பிரோட்டின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

தொடர்ந்து தடுமாறும் மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வோர்னரும் 11 ஓட்டத்துடன் பிரோட்டின் பந்து வீச்சில்  ரோரி பேர்ன்சிடம் பிடிகொடுத்தார். நடப்பு தொடரில் பிரோட்டின் பந்து வீச்சுக்கு வோர்னர் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறையாகும். 

அத்துடன் வோர்னர் இந்த தொடரில் 10 இன்னிங்சில் வெறும் 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து சொதப்பியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இதன் பின்னர் லபுஸ்சேனும் ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அவுஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர்களும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. லபுஸ்சேன் 14 ஓட்டத்துடன் ஜேக் லீச்சின் சுழலில் ஆட்டமிழந்தார்.

மறுமுணையில் ஸ்டீவன் ஸ்மித் 23 ஓட்டத்துடன் பிரோட்டின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இந்த தொடரில் சுமித்தின் குறைந்த ஓட்டத்தில் ஆட்டமிழப்பது இதுதான் முதன் முறை. மொத்தத்தில் இந்த ஆஷஸ் தொடரில் அவர் 774 ஓட்டங்களை குவித்துள்ளார்.

தொடர்ந்து வந்த மிட்செல் மார்ஷ் 24 ஓட்டத்துடனும், டிம் பெய்ன் 21 ஓட்டத்துடனும் சீரான இடைவெளியில் நடையை கட்டினர்.

இந்த நெருக்கடிக்கு இடையே அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டெடுக்க மேத்யூ வேட் போராடினர். ஆனால் அவர் சதம் அடித்தது மட்டுமே அந்த அணிக்கு கிடைத்த ஆறுதலாகும். தனது 4 ஆவது சதத்தை நிறைவு செய்த மேத்யூ வேட் 117 ஓட்டத்துடன்  ஜோ ரூட்டின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் ஆனார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்சில் 77 ஓவர்களில் 263 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதன் மூலம் 135 ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

பந்து வீச்சில் ஸ்டூவர்ட் பிரோட், ஜேக் லீச் தலா 4 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக ஜோப்பர ஆர்ச்சரும், தொடரின் ஆட்ட நாயகனாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49