ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக 'கரு'வை கள­மி­றக்க வேண்டும்: ரணி­லிடம் பெளத்த பிக்­குகள் கோரிக்கை

Published By: Digital Desk 8

16 Sep, 2019 | 11:41 AM
image

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் தேச­பந்து கரு ஜய­சூ­ரி­யவைக் கள­மி­றக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நேற்று முன்­தினம் அலரி மாளி­கையில் சந்­தித்த பௌத்த தேரர்கள் இந்தக் கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ளனர்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மையை ஒழிக்கும் யோச­னையை முன்­வைத்து சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­யாவை வேட்­பா­ள­ராக நிய­மித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரச்­சா­ரத்தை வழி­ந­டத்த வேண்டும் என்று மாத்­தளை தம்ம குசல அனு­நா­யக்க தேரர் இந்தச் சந்­திப்­பின்­போது வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கரு ஜய­சூ­ரி­யவை நிய­மித்தால், அவ­ருக்கு ஆசீர்­வாதம் வழங்­கு­வ­தற்­கான பகி­ரங்க நிகழ்­வொன்­றையும் தலைமைப் பிக்­கு­களின் வழி­ந­டத்­தலின் கீழ் நடத்­தவும் தயா­ராக இருக்­கின்றோம் என்ற செய்­தி­யையும் பிர­த­ம­ரிடம் தலைமைப் பிக்­குகள் வழங்­கி­யுள்­ளனர்.

இத­னி­டையே சிவில் செயற்­பாட்­டார்கள், மனித உரிமை ஆர்­வ­லர்கள், கல்­வித்­து­றையைச் சேர்ந்­த­வர்கள், புத்­தி­ஜீ­விகள் ஆகியோர் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து வேட்பாளர் நியமனத்திலுள்ள இழுபறி நிலைக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47