ஹங்வெல்ல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் பொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹங்வெல்ல பகுதியில் வேன் ஒன்றில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல எம்புல்கம சந்தி, பழைய வீதியில் வேன் ஒன்றில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்த நிலையில் ஹங்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 23 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த 26 வயதுடைய இளைஞர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றார்.

இரு பாதாள உலகக்குழுக்கழுக்கடையில் இடம்பெற்ற மோதலே குறித்த துப்பாக்கிபிரயோகம் இடம்பெறுவதற்கு காரணம் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன்  சம்பவத்திற்கு பயன்படுத்திய வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.