கற்கள் சரிந்து விழும் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் காணப்படுவதால் பதுளை சொரணத்தோட்ட பகுதியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில, குறித்த பகுதியில் வசிக்கும் 88 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.