பிரேசில் ஆய்வாளரான கார்லோஸ் டேவிட் டி சண்டனா, அமேசன் வனப்பகுதியில் 'போராக்' என்று அறியப்படும் மின்சார விலாங்கு மீன் வகைகளை கண்டுபிடித்துள்ளார்.

இதற்காக நீரோடைகளிலும், ஆறுகளிலும் இறங்கும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இறப்பர் கையுறைகளை எப்போதும் அவர் அணிந்திருந்தாலும், சில வேளைகளில் மின்சார அதிர்வுகளுக்கு உள்ளாவதை தடுக்க முடியவில்லை.

ஆனால், அவர் அனுபவித்த கஷ்டங்களுக்கு பயன் கிடைத்துள்ளது. இவரது ஐந்து ஆண்டு தேடலின் பயனாக மின்சார விலாங்கு மீனின் இரண்டு புதிய வகைகளை கண்டுபிடித்துள்ளார்.

அதில் ஒன்று 860 வொல்ட் மின்சாரத்தை வெளியிடும் சக்தியுடையது. இத்தகைய மீனிடம் இருந்து அதிக அளவிலான மின்சாரம் வெளியிடும் வரலாற்று பதிவை உருவாக்கியுள்ள மீனின் வகை இதுவாகும்.

இதற்கு முன்னால் 650 வால்ட் மின்சாரம் வெளியிடும் மீன் கண்டபிடிக்கப்பட்டதே அதிகபட்ச அளவாக பதிவாகியிருந்தது.