கொழும்பின், கொட்டாஞ்சேனை - ஆமர் - பாபர் சந்தி முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால் அப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக அப் பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.