சவுதி அரேபியாவிற்கு எதிராக  ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டவர்களிற்கு எதிராக தாக்குதலை  மேற்கொள்வதற்கான தயார் நிலையில் அமெரிக்க உள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ள அவர் சவுதி அரேபியா மீது யார் தாக்குதலை மேற்கொண்டார்கள் என அமெரிக்க நம்புவதற்கான காரணங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் எண்ணெய் விநியோகம் தாக்கப்பட்டது ,எங்களிற்கு குற்றவாளியை தெரிந்துள்ளது என்பதற்கான காரணங்கள் உள்ளன என குறிப்பிட்டுள்ள டிரம்ப் உறுதிப்படுத்தல்களை அடிப்படையாக வைத்து நாங்கள் தாக்குதலிற்கு தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த தாக்குதலிற்கு யார் காரணம் என சவுதி அரேபிய கருதுகின்றது என்ற அவர்களின் பதிலிற்காகவும் என்ன அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பிற்காகவும் நாங்கள் காத்திருக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.