ஹங்வெல்ல பகுதியில் வேன் ஒன்றில் வந்தோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல எம்புல்கம சந்தி, பழைய வீதியிலேயே குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி பிரயோகம் குறித்து ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.