இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந் நிலையில் முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் தருமசலாவில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. 

எனினும் இன்று பகல் வரை மழை பெய்து வந்ததால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதுடன், மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் நடைபெறுமா என்றும் சந்தேகம் எழுந்த நிலையில் போட்டி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.