கண்டி மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்தார்.

அனர்த்தம் குறித்தது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில், உடபலாத்த பிரதேச செயலக பிரிவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ்பாகே கொரலய பிரதேச செயலாக பிரவில் (நாவலப்பிட்டி) 13 குடும்பங்களை சேர்ந்த 57 பேரும்,தொலுவ பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தில் ஐவரும், கலகெதர பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தில் ஐவரும், கங்கவட்ட கோரலய பிரதேச செயலக பிரிவில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும் குண்டசாலை பிரதேச செயலாகப் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், பாத்ததும்பறை பிரதேச செயலகப் பிரிவில் நான்கு குடும்பங்களைச் சேரந்த 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை கண்டி மாவட்டத்தில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 13 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, 17 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் பாதிப்பு காரணமாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கலஹா மஹா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாதுகாப்பு நிலையத்தில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், பாரண்டாவளை தமிழ் வித்தியாலயத்தில் 12 குடும்ங்களைச் சேர்ந்த 52 பேரும் தற்காலிகமாக ங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை பாத்ததும்பறை பல்லேதலவின்ன பிரதேசத்தில் நான்கு வீடுகளுக்கு மேல் மின் கம்பங்கள் விழுந்ததில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.