சாதித்துக்காட்டினார் பெண் நடத்துனரின் மகன்- இந்திய கிரிக்கெட்டிற்கு மற்றுமொரு புதிய நம்பிக்கை நட்சத்திரம்

Published By: Rajeeban

15 Sep, 2019 | 08:14 PM
image

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணத்தை இந்தியா கைப்பற்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்த பெண் பேருந்து  நடத்துனரின் மகன் அதர்வா அன்கொலேகர் இந்திய கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணதொடரின் இறுதிப்போட்டியில் மிக முக்கியமான தருணத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளரான அதர்வா இந்திய அணி பங்களாதேசை தோற்கடித்து கிண்ணத்தை கைப்பற்ற உதவினார்.

இந்திய அணி 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த நிலையில் மிகச்சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்களை வீழ்த்திய அதர்வா பங்களாதேஸ் அணியை 101 ஓட்டங்களிற்குள் ஆட்டமிழக்க செய்தார்.

மும்பாய் கல்லூரி மாணவனான அதர்வாவிற்கு கிரிக்கெட் ஆர்வத்தை தூண்டியவர் அவரது தந்தை.

எனினும் அதர்வா தனது பத்து வயதில் தந்தையை பறிகொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

பேருந்து நடத்துனரான  அதர்வாவின் தந்தையின் மறைவிற்கு பின்னர் அவரது  தொழிலை அரசாங்கம் அதர்வாவின் தாய்க்கு வழங்கியது.

அதர்வாவின் தந்தையின் வழியில் பேருந்து நடத்துனராக  மாறிய அவரது தாய் அதர்வாவின் கிரிக்கெட் கனவு நினைவாக உதவினார்.

இந்திய பங்களாதேஸ் இறுதிப்போட்டியின் போது நான் எனது மகனிற்காக பிரார்த்தனை செய்தேன் என அவரது தாயார் வைதேகி குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் எனது மகன் விளையாடுவதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கா தனது மேல் அதிகாரிகளிடம் அன்றைய தினம் தனக்கு விடுப்பினை வழங்குமாறு கேட்டதாகவும் அவர்கள் அதற்கு இணங்கினார்கள் எனவும் வைதேகி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எனது கேபிள் டிவியில் மகன் விளையாடுவதை ஒலிபரப்பும் சனல் இல்லை இதன் காரணமாக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று போட்டியை பார்த்தேன் என அதர்வாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

நான் போட்டியை பார்த்தவாறு பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன் எனது பிரார்த்தனைகள் வீணாகவில்லை என வைதேகி  தெரிவித்துள்ளார்.

அதர்வாவின் தந்தை இதனை பார்ப்பதிற்கு இல்லையே என்பதே எனது ஒரே கவலை எனவும் தெரிவித்துள்ள வைதேகி அதர்வா தனது தந்தைக்கும் எங்கள் அனைவருக்கும் பெருமையை தேடி தந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதர்வாவின் தந்தை இறந்த பின்னர் மகனின் கிரிக்கெட் கனவுகளை காப்பாற்றுவதற்காக மிகவும் நெருக்கடிகளை சந்தித்தாக வைதேகி தெரிவித்துள்ளார்.

எனது மகனிற்கு கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்துவதற்கான சப்பாத்துக்களை வாங்குவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன என குறிப்பிட்டுள்ள அவர் இறுதிப்போட்டியில் வென்ற பின்னர் அதர்வா என்னை அழைத்து 14 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் விளையாடும் சகோதரனிற்காக சப்பாத்துக்களை வாங்கி வருவதாக தெரிவித்தான் என்கின்றார்.

 தனது மகனின் வெற்றிக்கு பின்னர் தன்னை பலர் அடையாளம் கண்டு பாராட்டுவதாகவும் வைதேகி தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58