(இராஜதுரை ஹஷான்)

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி  மறைமுகமாக முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சிகளை ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கின்றது. இதற்கு தேர்தல் ஆணைக்குழு  ஒருபோதும் இடமளிக்க முடியாது. மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் உரிமை நிச்சயம் தோன்றவுள்ள பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.