லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜின் தோட்டத்தில் நேற்றிரவு (14)  9 மணியளவில் பாடசாலை மாணவன்  ஒருவன்   சிறுத்தை புலியின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து பிரதேச மக்கள் குறித்த மாணவனுக்கு முதலுதவி வழங்கியதைத் தொடர்ந்து படுகாயமடைந்த மாணவன்  லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக  அதிகாலை 2 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

குறித்த மாணவன் ஹட்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போதே குறித்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். 

அந்த மாணவன் ஊவாக்கலை எனும் இடத்திலிருந்து எல்ஜினில் உள்ள தனது வீட்டை நோக்கி தனியாக சென்று கொண்டிருந்த போது சிறுத்தை புலி அவன் மீது பாய்ந்து சரமாரியாக தாக்கியுள்ளது. 

இதனையடுத்து அவன் கூக்குரல் இட்டதில் சிறுத்தை ஓடிய நிலையில் படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள்  வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.