(ஆர்.யசி)

ஒற்றை ஆட்சிக்குள் அதியுச்ச அதிகார பகிர்வு என்ற நோக்கத்தில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமே தவிர சமஷ்டி கோரிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த சஜித் பிரேமதாச தயாரில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணி உறுப்பினரும்  அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை பெற்றுவிட்டதாகவும் சஜித் பிரேமதாச வெகு விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார். 

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பெரேரா இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்புக் கருத்து தெரிவிக்கும் போதே இவற்றைக் கூறினார்.