மெக்சிக்கோவில் கிணறு ஒன்றிலிருந்து 44 உடல்களை அதிகாரிகள் மீட்டப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் படுகொலைகள் அதிகளவில் இடம்பெறும் ஜலிஸ்கோ மாநிலத்திலேயே அதிகாரிகள் உடல்களை மீட்டுள்ளனர்.

துர்நாற்றம் காணப்படுவதாக உள்ளுர் மக்கள் வழங்கிய தகவலை தொடர்ந்து கிணறு ஒன்றை சோதனையிட்டவேளை 119 கறுப்புபைகளில்இந்த உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பல உடல்கள் துண்டுதுண்டாக சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

பல வருடங்களாக கைவிடப்பட்ட மரங்கள் அடர்ந்த பாதி கட்டிமுடிக்கப்பட்ட கட்டிமொன்றில் காணப்பட்ட கிணற்றிக்குள்ளேயே இந்த உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

பலநாட்களாக அந்த கிணற்றை சுற்றிபெருமளவில் பூச்சிகள் காணப்பட்டன செப்டம்பர் மாத மழைக்கு பின்னர் அந்த கிணற்றிலிருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உடல்களை அடையாளம் காண்பதற்காக பல பாகங்களை பொருத்தவேண்டியிருந்தது பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜலிகோ மாநிலத்தின் தலைநகரமான குவடலஜராவில் இவ்வருடம் 15 மனித புதைகுழிகளிற்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மெக்சிக்கோவின் மிகமோசமான போதைப்பொருள் கும்பலான ஜலிஸ்கோ புதிய தலைமுறை  என்ற அமைப்பு இங்கிருந்தே இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் போட்டிக்குழுக்களை கொலை செய்யும் வீடியோவை வெளியிட்டு இந்த குழுவினர் பீதியை ஏற்படுத்தியிருந்தனர்.