இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் பயணித்த படகொன்று கவிழ்ந்து இன்று விபத்துக்குள்ளானதில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிப் பயணித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். 

பயணம் செய்த 61 பேரில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படையினரால் மீட்க்கப்பட்டுள்ளதுடன், 40 பேர் மாயமாகியுள்ளனர். 

மீட்பு நடவடிக்கைகளில் இரண்டு தேசிய பேரிட மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து அனைத்து படகு சேவைகளையும் உடனடியாக நிறுத்தி வைக்குமாறு குறித்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.