(நா.தினுஷா)

5000 சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நிரந்தர நியமனங்களை வழங்கும் வைபவம் இன்று பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் இடைபெற்றது. 

அலரி மாளிகையில் நடைபெற்ற  இந்த  வைபவத்தில்  அமைச்சர்களான தயா கமகே, வஜிர அபெயவர்தன, பி. ஹரிசன், அனோமா கமகே ஆகியோரும் கலந்துக்கொண்டனர். 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர்,

பாராளுமன்றத்தில்  பெரும்பான்மையில்லாத நிலையில் பெரும் சவால்களுக்கு மத்தியில் நான்கரை  வருடங்கள் இந்த அரசாங்கத்தை  ஜனநாயக ரீதியில் முன்னெடுத்துள்ளோம். ஆனால் இன்று  ஊடகங்கள்  எனக்கு  எதிராக பல்வேறு விமர்சனங்களை  முன்வைக்கின்றன. இதுவே  எங்களின் ஜனநாயக வெற்றியாகும். சர்வாதிகாரத்தால்  எதனையும் வெல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டி விட்டோம்.

நாட்டில் அனைவருக்கும் சுதந்திரமாக செயற்ட கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். கடந்த அரசாங்கத்தை போன்று  இன்று வெள்ளை வேன் கலாச்சாரம் நாட்டில் இல்லை. மாறாக  மக்கள் நலதிட்டமான 'சுவசெரிய ' சேவை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.