கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை இடம்பெற்ற வெடி விபத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தெமட்டகொடை மகாவில்ல வீதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் சமயல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து சம்பவத்துள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.