ஆளில்லா விமானதாக்குதலைதொடர்ந்து - சவுதியின் எண்ணெய் உற்பத்தி பெருமளவு பாதிப்பு- சர்வதேச விநியோகத்தில் நெருக்கடி- விலை அதிகரிக்கும் அபாயம்-

Published By: Rajeeban

15 Sep, 2019 | 07:43 AM
image

சவுதிஅரேபியாவின் இரு முக்கிய எண்ணெய் உற்பத்திநிலையங்கள் மீது யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் மேற்கொண்ட ஆளில்லாத விமானதாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியா தனது நாளாந்த எண்ணெய் உற்பத்தி பாரிய பாதிப்பை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக நாள் ஒன்றிற்கு நாங்கள் 5.7 மில்லியன் பரல் கச்சா எண்ணெய் மற்றும் வாயு உற்பத்தியை இழக்கவேண்டிய நிலையிலுள்ளோம் என சவுதி அரேபியாவின் எரிசக்தி துறை அமைச்சர் அப்துல்அசீஸ் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஒபேக்கின் புள்ளிவிபரங்களின்படி நாள்ஒன்றிற்கு சவுதிஅரேபியா 9.8 மில்லியன் பரல் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா விமானதாக்குதல்கள் காரணமாக இழந்தவற்றை மீளப்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியாவிற்கு எதிராக மாத்திரம் மேற்கொள்ளப்படவில்லை,சர்வதேச எண்ணெய் விநியோகத்தினையும் பாதுகாப்பையும் இலக்குவைத்தும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன  இதனால் உலக பொருளாதாரத்திற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அப்கெய்க் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம்  சர்வதேச எண்ணெய் விநியோகத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான இடம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் சர்வதேச சக்தி கொள்கை நிலையத்தின் இயக்குநர் ஜேசன்போர்டொவ் எண்ணெய் விலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்த தாக்குதல்களிற்கு யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களிற்கு அதரவு அளித்து வரும் ஈரான் பொறுப்பேற்கவேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரானிய தலைநகர்கள் இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்யும் அதேவேளை ஈரான் சவுதிஅரேபியா  100ற்கும் மேற்பட்ட தாக்குல்களை மேற்கொண்டுள்ளது என மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ஈரான் சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் மீது எதிர்பாரத தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ள மைக்பொம்பியோ இந்த தாக்குதல் யேமனிலிருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10