வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக தெரிய வருகையில்,

வவுனியா நகர் பகுதியிலிருந்து தாண்டிகுளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் திருநாவற்குளம் ஜயனார் கோவிலுக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.