புத்தளம் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் மதுரங்குளி பகுதியிலேயே குறித்த பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.